கொரோனா தொற்று; மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்க வேண்டுமென தொற்று நோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று வீடுகளுக்கு சென்றுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.