நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

அமெரிக்காவின் நியூயோர்க்கின் ரொசெஸ்ரர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, 13 பேர் வரை காயமடைந்துள்ளனர் என உள்@ர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூடு மக்கள் கூடியிருந்த பகுதியொன்றில் இடம்பெற்றுள்ள நிலையில், பாதிப்பு குறித்து முழுமையான தகவலை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.