வெடி பொருட்களை வைத்திருந்தார்களாம்; பளை பொலிஸாரால் இருவர் கைது

வெடிபொருள்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி ஓரத்தில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சந்தேகத்திற்கிடமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸார் சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன் போது இருவரும் தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.

ஆந்த இடத்தில் பையொன்றிலிருந்துவெடிபொருள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வெடிபொருள்களை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 மற்றும் 23 வயதுடைய கிளாலி பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறுகைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஆவர்.