கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் கோலி

ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான தரவரி சையில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

இதில், முதல் இடத்தை இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 871 புள்ளிகளுடன் தக்கவைத்தார். இராண்டாவது இடத்தையும் இந்திய வீரரான ரோஹித் சர்மா 855 புள்ளிகளுடன் தொடர்கிறார்.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து தொடரில் 112 ஓட்டங்களை எடுத்த இங்கிலாந்தி பேர்ஸ்ரோவ் 10 ஆவது இடத்திற்கு முன்னேறினார். இதுபோல், அவுஸ்திரேலியாவுக்காக சதம் அடித்த மக்ஸ்வெல், கேரி ஆகியோர் 26, 28 ஆவது இடங்களுக்கு முன்னேறியுள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் இங்கிலாந்து (123 புள்ளி), இந்தியா (119), நியூசிலாந்து (116), அவுஸ்திரேலியா (109), தென்னாபிரிக்கா (108) அணிகள் நீடிக்கின்றன.