இராணுவத்தை விமர்சிக்கும் ஆளும் கட்சியினருக்கு சிறை; பாகிஸ்தானில் புதிய சட்டம் அறிமுகம்

இராணுவத்தை விமர்சிக்கும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறைத் தண்டனை அளிக்கும் சட்டத்தை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் பாராளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

“பாகிஸ்தானின் ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற அல்லாது மாகாண உறுப்பினர்கள் இராணுவத்தை ஏளனம் அல்லது இழிவுபடுத்தும் செயலை செய்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறையுடன் 5 இலட்சம் பாகிஸ்தான் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும்” என்றுள்ளது.

இந்த சட்டத்தின் நோக்கம் ஆயுதப் படைகளுக்கு எதிரான வெறுப்பு மற்றும் அவமரியாதையை நடவடிக்கைகளைத் தடுப்பதாகும் என்று பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் அம்ஜத்அலிகான் கூறினார்.