ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரில் நஞ்சு; ஜேர்மனியில் சிகிச்சை

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தங்கியிருந்த ஹோட்டலில், அவர் குடித்த தண்ணீரில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டதாக அவரின் உதவியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராகப் போராடி வரும் அலெக்ஸி நவால்னி திடீரென உடல் நலமிழந்ந்தார். சிகிச்சைக்காக அவர் ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவரின் உடலில் நஞ்சு கலந்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பில் அவரின் உதவியாளர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலின்படி,”ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுவரும் தலைவர் அலெக்ஸி நவால்னி விமானப் பயணத்திற்கு முன்னர் டோம்ஸ்க் நகரில் தங்கியிருந்தார். அவர் தங்கிய ஹோட்டலிலேயே அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது. அவரது அறையில் இருந்த தண்ணீர் போத்தலில் நொவிசோக் நச்சுப் பொருள் படிந்திருந்தது. இதன்மூலம், அவர் விமான நிலையத்துக்கு வரமுன்னரே அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டதுதெரிய வந்தது” என்றுள்ளது.