கிரிக்கெட்டா? கொரோனாவா? நாமலே தீர்மானிக்க வேண்டும் என்கின்றார் மனோ

கிரிக்கெட்டா, கொரோனாவா என நாமல் தீர்மானிக்கவேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தக் குறிப் பிட்டுள்ளார்.

“நாட்டில் கொரோனா நோயாளரில் பெரும்பாலோர் வெளிநாடு சென்று வந்தோர். இந்நிலையில், இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் கிரிக் கெட் அணி, நமது சுகாதார துறையின் 14 நாள் தனிமைப்படுத்தல் பரிந்துரையை ஏற்கமறுக்கிறார்கள். ஆகவே விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கிரிக்கெட்டா, கொரோனாவா என தீர்மானிக்க வேண்டும்” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.