20 ஆவது திருத்தம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

அரசியலமைப்பின் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவலறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

சர்வஜன வாக்கெடுப்பின்றி 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியுமென சட்ட மாஅதிபர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அமைச்சரவையிலும் இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

அமைச்சரவையின் ஒப்புதலின் பின்னர் 20ஆவது திருத்தச்சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த பின்புலத்திலேயே எதிர்வரும் 22ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆட்சேபனைகள் இருந்தால் ஏழு நாட்களுக்குள் நாட்டு பிரஜைகளால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்ய முடியும். சட்டமூலத்தை எவரும் ஆட்சேபிக்காவிட்டால் ஒருவாரத்தின் பின்னர் அதனை நிறைவேற்றுவதற்கானஅடுத்தக்கட்ட நடவடிக்கைள் பாராளுமன்றில் இடம்பெறும்.