மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் கருத்தை வரவேற்கும் கூட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந் திரன் தெரிவித்தார். அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் கடுமையாக எதிர்த்துள்ளதுடன் இலங்கை ஐ.நாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை இந்தத் திருத்தத்தின் மூலம் மீறுகின்றது எனத் தெரிவித்து இலங்கையின் போக்குக்கு அவர் கடும்கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

ஆணையாளரின் இந்தக் கரிசனையையும் வரவேற்றுள்ள சுமந்திரன் எம்.பி., இலங்கை அரசு தனது போக்கில் உடன் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.