சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர் விமான நிலையத்தில் நேற்று கைது

சட்டவிரோத வீஸாக்களைப் பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்றுக் காலை இந்த நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சட்ட விரோதமாக கனடா செல்ல முயற்சித்தனர்.

அத்தோடு, குறித்த 13 பேரும் கட்டாரின் டோஹா ஊடாக கனடா செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.