அரசியல் பழிவாங்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விஜயகலாவிடம் இன்று 5 மணி நேர விசாரணை

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனிடம் சுமார் 5 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இன்று காலை ஆஜராகி சாட்சியம் அளித்தார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஞானலிங்கம் மயூரன் என்கின்ற நபரது முறைப்பாட்டுக்கு அமையஅவரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

தான் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டமைக்கு விஜயகலா மகேஸ்வரனின் தலையீடுகள் இருந்தன என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.