வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் விமானங்களை மட்டுப்படுத்தியது அரசாங்கம்

வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் விமான சேவைகளை நாளுக்கு ஒன்றாக மட்டுப்படுத்தியுள்ளது அரசாங்கம்.

இலங்கையில் கடந்த 4 நாட்களில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. நாட்டுக்குள்வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணித் தலைவரும் இராணுவ தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரொனா தொற்றுப் பரவலால் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப முடியாது பலர் சிக்கினர். இவர்கள் தினமும் நாட்டுக்கு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் கொரோனா தொற்றாளர்கள் நாட்டுக்குள் வருவது அதிகரித்தது. இதையடுத்து அவர்களை அழைத்து வரும் விமான சேவைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, நேற்றுமுதல் நாளொன்றுக்கு ஒரு விமானத்திலேயே இலங்கையர்களை அழைத்து வருவது என்று முடிவு எடுக்கப்பட்டது.