கொரோனா: அமெரிக்கா கண்டுபிடித்த மருந்து அக்டோபரில் பாவனைக்கு வரும்

கொரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்கா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து ஒக்ரோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 2 இலட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,

நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்களை பெறபல ஆண்டுகளை எடுத்திருக்கும். ஆனால், அந்த ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றோம் – என்றார்.