இலங்கை கடற்பரப்பில் எரிந்த பனாமா கப்பல்: 34 கோடி நட்டஈடு கேட்கும் இலங்கை

இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் தீப்பற்றிய கப்பலில் தீயை அணைத்த செலவாக 34 கோடி ரூபாவை கப்பல் உரிமையாளர்களிடம் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் கப்பலின் தீ ஏற்பட்டது. இதனை அணைப்பதற்தகாக கடற்படை, விமானப் படையினர் போராடியிருந்தனர்.

இதன்போது ஏற்பட்ட செலவினத்தை அரசாங்கம் இப்போது அறிக்கையிட்டுள்ளது. இதன்படி, கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து 34 கோடி ரூபா செலவுக் கோரிக்கையை சட்டமா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.

நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், அதற்கு வழங்கிய ஒத்துழைப்புகளைச் சுட்டிக்காட்டியும் சட்டமா அதிபர் தபுல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரி கப்பலின் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளிடம் இந்த செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, செலவுத் தொகையை முழுமையாக செலுத்தும் வரை கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.