’20’ ஐ.நா. ஆணையாளர் தெரிவித்த கருத்துக்கள் தேவையற்றவை: ஜெனீவாவில் இலங்கைப் பிரதிநிதி

முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பட்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொது விவாதத்தின் போது ஜெனீவாவில் ஐ.நா. வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் நேற்று முன்தினம் அளித்தஅறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், அரசமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என ஆணையாளர் மைக்கேல் பச்லெட்டின் கடந்த திங்களன்று தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தம் ஒரு முழுமையான ஜனநாயக வழிமுறையைத் தொடர்ந்து விவாதிக்கப்படும். அங்கு அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைக்கும்.

மேலும், இவ்வாண்டு பெப்ரவரியில் இலங்கையானது முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியதால் புதிய அரசாங்கம் ஐ.நா. சபைக்கு அளித்த உத்தரவாதங்கள் குறித்து உறுதியுடன் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.