20 ஆவது திருத்தம் குறித்த மீளாய்வு அறிக்கை அமைச்சரவைக்கு அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை; மகிந்த அமரவீர

20வது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுகுழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சர் மகிந்தஅமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை சந்திப்பின் பின்னர் இதனை தெரிவித்துள்ள அமைச்சர் அமைச்சரவை கூட்டத்தின் போது அரசமைப்பு குறித்து ஆராயப்பட்டது அந்த விடயங்களுக்கான பொறுப்பை தான் எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

20வது திருத்தம் தற்காலிக நடவடிக்கை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் புதிய அரசமைப்பு துரிதவேகத்தில் முன்வைக்கப்படும் என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு ஏற்ற அரசமைப்பை தயாரிப்பதற்காக எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20வது திருத்தத்தினை உருவாக்கியவன் என்ற அடிப்படையில் அதற்கான பொறுப்பை ஏற்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் அமைச்சர் மகிந்தஅமரவீர குறிப்பிட்டுள்ளார்.