சமூகத் தொற்று இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் பவித்திரா பெருமிதம்

நாட்டுக்குள் கொரோனா தொற்று இல்லை,100 நாட்களுக்கும் மேலாக சமூகத்தொற்று இல்லாமல் நாம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியுள்ளோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதன் ஊடாகவே, கொரோனா சவாலில் இருந்து முழுமையாக வெற்றியடைய முடியும். இந்த நிலைமையை நாம் தொடர்ந்தும் பேணவேண்டும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகிறது. இதற்காக அரசாங்கம் எனும் வகையில், தொடர்ந்தும் பிரசாரங்களை மேற்கொண்டுதான் வருகிறோம்.

மக்கள் இதனை உணர்ந்து, உரிய சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம். சுகாதார ஆலோசனைகளை மக்கள் முற்றாக பின்பற்றினால்தான் இந்த சவாலில் இருந்து எம்மால் வெற்றியடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.