20 ஆவது திருத்தத்தில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன; ஆராய்வதாகக் கூறுகின்றார் விமல் வீரவன்ச

20ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள சில சரத்துக்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்து இருப்பதாகவும் அதுதொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆராய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. குறித்த குழுவின் கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம். இதுதொடர்பான எமது அனைத்துக் கருத்துக்களையும் அமைச்சரவைக்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்துவோம். பெரும்பான்மையான சரத்துக்களுக்கு நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களுடன்தான் காணப்படுகிறோம்.”