சசிகலா எப்போது வெளியே வருவார்? இன்று வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்ற எதிர்பார்ப்பு சராசரி மக்கள் முதற்கொண்டு அரசியல் வட்டாரம் வரை பெரும் பேசு பொருளாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக ஆகஸ்ட் மாதம் வெளியே வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி சசிகலா எப்போது வெளியே வருவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி சசிகலா வருகின்ற 2021ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று தெரிய வந்துள்ளது. ஜனவரி 27ம் தேதி பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்து அவர் விடுதலை ஆக உள்ளார். ரூ. 10 கோடி அபராதம் கட்டியாக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையை கட்டவில்லை என்றால் விடுதலை மேலும் ஓராண்டு தள்ளிப்போகும் என்று தெரிய வந்துள்ளது.

2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரில் இருக்கும் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலாவின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.