தடையை மீறி திலீபனுக்கு அஞ்சலி: சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் கைது

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய வேளை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பாகியுள்ள நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வை நடத்த நேற்று யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் யாழ். நீதிவான் நீதிமன்றில் தடையுத்தரவைப் பொலிஸார் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.