கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது எனச்சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி நாடு திரும்பிய கப்பல் மாலுமியான குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப் படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அதையடுத்து குறித்த நபர் கடந்த 9ஆம் திகதி சிலாபம் வைத் தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்று அரசதகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரெனஅதிகரித்துள்ளது. நேற்று கொரோனா வைரஸ் தொற்றுடன் 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,195 இலிருந்து 3,234 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,996 இலிருந்து 3,005 ஆக உயர்ந் துள்ளது.

நேற்று கட்டாரிலிருந்து வந்த 16 பேர், அமீரகத்திலிருந்து வந்த 12 பேர், குவைத்திலிருந்து வந்த 6 பேர், மாலை தீவிலிருந்து வந்த 2 பேர், எத்தியோப்பியா விலிருந்து வந்த ஒருவர், தாய்லாந்திலி ருந்து வந்த உக்ரைன் நாட்டவர் ஒருவர், செங்கடல் பகுதியிலிருந்து வந்த கடல் பணியாளர் ஒருவர் ஆகிய 39 பேர் கொரோ னாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட் டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.