இற்திய எம்.பி.க்களில் 25 பேருக்கு கொரோனா உறுதி; கடும் பாதுகாப்புடன் நடந்த கூட்டத் தொடர்

இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு நேற்று வந்த 25 எம்.பிக்களுக்கு கொரனாோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பா.ஜ.க எம்.பிக்கள் 12, வை.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் 2 பேர், சிவசேனா, தி.மு.க, ஆர்.எல்.பி கட்சிகளில் தலா ஒருவருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளது.

25 பேரில் 17 பேர் மக்களவை எம். பிக்கள்,ஏனையயோ மாநிலங்களவை எம்.பிக்கள் என்பது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன.

நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்துக்கு கொரோனா பாதுகாப்பு ‘கிட்’ கொண்டு வரப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினமும், நேற்றும் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருந்த பா.ஜ.க எம்பி சுகந்தா மஜூம்தர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மீனாட்சி லேகி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் சாஹிப் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் செர்ந்த தி.மு.க எம்பி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார் என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 785 எம்பிக்களில் 200 பேர் 65 வயதுக்கும் அதிகமானவர்கள். இதற்கு முன்னதாக 25 எம்.பிக்கள் மற்றும் 7 மத்திய அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இவர்களில் அமைச்சர் அமித் ஷாவும் ஒருவர், இவருக்கும் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை நடந்து வருவதாக செய்தி வெளியாகிஇருந்தது.

இந்த நிலையில் ராஜ்ய சபையில் உறுப்பினர்கள் தனிமனித இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனர். மேலும், உறுப்பினர்கள் தங்களது வருகையை குறிப்பிட தனியாக APP ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் முகக்கவசம், முகத்தை மறைக்கும் பாதுகாப்பு உறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.