பிரான்ஸில் 24 மணித்தியாலத்தில் 7 ஆயிரம் கொரோனா தொற்றாளர்

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட் – 19) தொற்றால், கடந்த 24 மணித்தியாலத்தில் 7 ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் – 19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 13 ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை மூன்று லட்சத்து 81 ஆயிரத்து 94 பேர் வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்து 916 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 119 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 635 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன், இதுவரை 89 ஆயிரத்து 59 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.