ஐ.தே.க. பிரதி தலைவராக ருவான் தெரிவு; இரகசிய வாக்கெடுப்பில் ரவி கருணாநாயக்கவை தோற்கடித்தார்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக ருவான் விஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரதி தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது பிரதி தலைவர் பதவிக்காக ரவி கருணாநாயக்க,ருவான் விஜயவர்தன,முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக 28 வாக்குகளுடன் ருவான் விஜேவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்கவிற்கு 10 வாக்குகள் கிடைத்ததாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.