ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்தார்; பெண் ஒருவர் இளவாலையில் கைது

உயிர்க் கொல்லி போதைப்பொருளான ஹேரோயினை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இளவாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சந்தே நபர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.