20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு பிரதமரினால் குழு நியமிப்பு

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் தலைவராக அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பெயர் விபரம் வருமாறு,

  1. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
  2. அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில
  3. அமைச்சர் மொஹமட் அலி சப்ரி
  4. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
  5. அமைச்சர் விமல் வீரவன்ச
  6. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
  7. இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்
  8. பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா
  9. பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த

இக்குழுவின் அறிக்கை செப்டம்பர் 15ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.