ஐ.தே.க.வின் புதிய தலைவர் யார்? அடுத்த வாரம் அறிவிப்பு வெளிவரலாம்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் எனக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக இது தொடர்பான தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டனர் என அவர் குறிப்பிட்டார். “நாங்கள் வெற்றிகரமான பேச்சுக்களை மேற்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளோம். நீண்ட காலத்தின் பின்னர் நாங்கள் இணக்கப்பாட்டை நோக்கிச் செல்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியை முற்றாக மாற்றுவது குறித்தும் கடந்த வாரம் பேச்சுக்கள் இடம்பெற்றன” எனத் தெரிவித்த அவர், வேறு முக்கிய மாற்றங்கள் இடம்பெறலாம் எனவும்கூறினார்.

கட்சியின் புதிய தலைவர்களாக வரக்கூடியவர்களின் இறுதிப் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.