மீசாலையில் வாள்வெட்டுக்குழு நேற்றிரவு அட்டகாசம்: ஆபத்தான நிலையில் குடும்பப் பெண்

தென்மராட்சி, மீசாலைப் பகுதியில் குடும்பப் பெண் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று இரவு 8.45 மணியளவில் இந்தத்தாக்கு தல் இடம்பெற்றது.

முகத்தை கறுப்புத் துணிகளால் மறைத்தபடி சென்ற வாள்வெட்டுக்குழு, குடும்பத் தலைவியான பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளது. கை, கால், உடம்பு எனச் சகட்டு மேனிக்கு வெட்டப்பட்டதில் அந்தப் பெண் உயிராபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்சைக் காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீதரன் பவானி (வயது-40) என்ற குடும்பப் பெண்ணே தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்திருக்கின்றார்.