15 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; 3 பேர் கைது – தென்மராட்சிப் பகுதியில் சம்பவம்

தென்மராட்சிப் பகுதியில் சிறுமியயாருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர். 15 வயதான சிறுமியும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் இந்தச் சம்பவம் நடந்தது. தந்தையும், தாயும் வெவ்வேறு திருமணங்கள் முடித்து தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், தனது தாத்தாவின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமியே பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டார்.

சிறுமியின் வீட்டுக்கு சில ஆண்கள் தொடர்ச்சியாக வந்து செல்வது குறித்து, கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தைப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இந்த விவகாரத்தைக் கண்காணித்து சிறுமிக்கு சில அறிவு றுத்தல்களை வழங்கினர். எனினும், நிலைமையில் முன்னேற்றம் தென்படாததையடுத்து, அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிரடியாகச் செயற்பட்ட பொலிஸார் நேற்று முன்தினம் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது 15 வயதான சிறுமியுடன் திருமணமான இரண்டு ஆண்கள் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர். சிறுமியின் பராமரிப்பாளரான தாத்தா வீட்டிலிருக்கவில்லை. இதன்போது சம்பவ இடத்தில் பிரசன்னமாகிய ஒரு இளைஞனும் கைது செய்யப்பட்டார்.