குட்டிமணிக்கு ஒரு நீதி பிரேமலாலுக்கு மற்றொரு நீதியா? பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கேள்வி

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் செல்வராஜா யோகசந்திரன் எனக் குறிப்பிடப்படும் குட்டிமணி எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ள பாராளுமன்றம் வந்தபோது கடைப்பிடிக்கப்பட்ட சம்பிரதாயத்தை தற்போதைய சபாநாயகர் ஏன் கடைப்பிடிக்கவில்லையென எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.30 மணிக்கு கூடியதபிரதான செயற்பாடுகளை தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர், செல்வராஜா யோகசந்திரன் அதாவது குட்டிமணி என்ற எம்.பி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் ரெலோ அமைப்பின் தலைவர் என்ற வகையில், 1982ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டார். அதன்படி அவரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்கு ழுவினால் அறிவிக்கப்பட்டு சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டவராகும். ஆனால் அந்த நேரத்தில் யோகசந்திரன் மேன்முறையீடு செய்திருந்த போதும், அவருக்கு எம்.பியாக சத்தியப்பிரமானம் செய்வதற்கு சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை. அரசியலமைப்பின் 89 ஆம் உருப்புரை மற்றும் 91 உறுப்புரைக்கு அமைவாகவே அவருக்கு இடமளிக்கவில்லை. அதன்போது பாக்கீர் மக்கார் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார்.

இதன்படி தற்போதைய சபாநாயகர் அந்த சரத்துக்களை மீறி சில தினங்களுக்கு முன்னர் தீர்மானம் எடுத்துள்ளீர்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த செல்வராஜா யோகசந்திரனுக்கு அது தொடர்பாக மேன்முறையீடு செய்திருந்த நிலையிலேயே அவரின் எம். பியாகும் உரிமை மறுக்கப்பட்டது. அப்படியாயின் ஏன் அந்த முன்மாதிரியை செயற்படுத்த நீங்கள் நடவடிக்கையெடுக்கவில்லை.

சபாநாயகரின் பொறுப்பானது எம்.பிக்களினதும் , சபையினதும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் நாட்டின் மேலான்மை சட்டமான அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் உங்களால் அது மீறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவலையடைகின்றேன்” என்றார்.