யாழ்ப்பாணத்தில் பாரிய வெடிப்புச் சத்தங்கள்; பாவனைக்குதவாத வெடிபொருட்கள் செயலிழக்கவைப்பு

யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் இன்று பகல் வெடிப்பு சத்தங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்பகுதியில், பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுப்பட்டதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.