இந்திய தூதரக ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99ஆவது நினைவு நாள் நிகழ்வுகள்

இந்திய தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரின் 99ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று காலை யாழ். அரசடி சந்தியில் உள்ள அவரது திருவுருவச் சிலை முன்றலில் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

யாழ். இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னால்ட், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் கவிஞரின் அபிமானிகள் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இரண்டு நிமிட அமைதி வணக்கத்துடன் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்தது.