இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“தேசிய சொத்துக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு இடமளிக்கப்படாது. தேசிய சொத்துக்கள் ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்யப்படுகிறது என முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராகவே அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. 13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வற்புறுத்துவதற்கு இந்தியாவுக்கு எந்தவோர் உரிமையும் கிடையாது.

இலங்கை சுயாதீன நாடு என்ற ரீதியில் இந்தியா இலங்கைக்கு யோசனை திட்டங்களை மாத்திரமே முன்வைக்க முடியும். அதற்கு மாறாக இலங்கைக்கு எந்ததொரு விடயத்திலும் உத்தரவிட முடியாது.”