யாழ். ஆரியகுளம் பகுதியில் சைவ உணவகம் முடக்கம்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் மூடப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த நபர் கடந்த 31ஆம் திகதி அந்தஉணவகத்தில் வந்து உணவருந்திச் சென்றார் எனவிசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை அங்கு பணியாற்றும் 11 பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.