விமான நிலையங்கள் ஜனவரி 23 இல் திறப்பு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு

ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். முழுச் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.