விமானப்படை அதிகாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதா? நாடாளுமன்றத்தில் எதிரணி கேள்வி

கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விமானப்படை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆசிரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

இராணுவத்தினர் பிரதேச செயலகங்களிற்கு நியமிக்கப்படுவதன் தொடர்ச்சியாகவா விமானப் படையினர் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கா நியமிக்கப்படுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இந்தக் கேள்வியை எழுப்பினார். கடந்த ஒரு வருட காலப் பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக கல்வி முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விமானப் படையினரைக் கற்பித்தலில் ஈடுபடுத்துவது கேள்விக்குரிய விடயம் என அவர் தெரிவித்தார். இது ஆசிரியர் சேவையை மீறும் செயல் ஆசிரியசேவைக்கான தேவைகளை மீறும் செயல். இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.