பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர், தாதியர் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தல்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர், தாதியர் உள்ளிட்ட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மந்தியை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று உறுதியானது. வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை நோ போன்ற அறிகுறிகளும் அவரில் தென்பட்டன.

இதையடுத்து, அவரின் பி.சி.ஆர் மாதிரி பெறப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன்போது அவருக்கு தொற்று உறுதியாகியது.

இதனையடுத்து, அவருக்கு சிகிச்சையளித்த, தொடர்பில் இருந்த வைத்தியசாலைப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியர் ஒருவர், தாதியர்கள் இருவர், மருத்துவப் பணியாளர்கள் இருவர், சிற்றூழியர்கள் இருவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.