வவுனியா பட்டாணிச்சூர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது – வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது

Red an white warning sign on a fence stating in "Quarantine - Coronavirus beyond this point" with a blank space underneath.

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஒழுங்கையில் இருந்து 5 ஆம் ஒழுங்கை வரை அனைத்து பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளதுடன் எவரும் வெளியேற அனுமதிக்கப்படாத நிலையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இந்தப் பகுதியிலேயே வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் இருந்து வந்து வர்த்தகத்தில் ஈடுபடுவர்களை வர்த்தக நிலையங்களை மூடுமாறு சுகாதாரப்பகுதியினரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.