பாடசாலைகள் 25ஆம் திகதி மீள ஆரம்பம் – மார்ச் மாதம் சாதாரண தரப் பரீட்சை

11ஆம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இதனாலேயே அந்த வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

எனினும், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாது என்றும் நேற்று கொழும்பில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாடசாலைகள் அறிவித்தபடி ஆரம்ப மாகும். எனினும் தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை பெப்ரவரி மாதமே இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று பாலர் பாடசாலைகளும் விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.