மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 6 பேருக்கு கொரோனா – பருத்தித்துறையிலும் ஒருவருக்குத் தொற்று

மருதனார்மடம் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 240 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூன்று பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 5 பேரும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை (மந்திகை) ஆதாரவைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்திலுள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்தார் எனவும் அங்கு தண்ணீர் குடித்தார் என்று சுகாதாரத் துறையினருக்குத் தெரிவித்தார்.

பின்னர் காய்ச்சல் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் முன்னெடுத்த பி.சி.ஆர். பரிசோதனையில் மாதிரிகளை மீளப்பெறுமாறு அறிக்கையிடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்னெடுக்கப் பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத் தப்பட்டது.

அவரது குடும்ப உறுப்பினர்களைச்சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.