மட்டக்களப்பில் கடும் மழை – 24 மணி நேரத்தில் 142 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 142.4 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சி 142.4 மில்லி மீட்டர் என மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தகவல்கள் தெரிவித்தார்.

கடந்த 1, 2, 3 ஆந்திகதிகளில் பெய்த இடிமின்னலுடன் கூடிய அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கருத்து தெரிவித்த அரச அதிபர் மட்டக்களப்பு நகரில் 1 ஆம் திகதி 16.2 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சியும் 2 ஆம் திகதி 17.5 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் அதிகளவான மழை வீழ்ச்சியாக 142.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் மேலும்; நாவகிரி 68.1 மில்லிமீட்டர் தும்பன்கேணி 44.1 மில்லிமீட்டர்இ மைலம்பாவெளி 111.2 மில்லிமீட்டர்இ பாசிக்குடா 40 மில்லிமீட்டர்இ உன்னிச்சை 28.5 மில்லிமீட்டரஇ; வாகனேரி 78.2 மில்லிமீட்டர்இ கட்டுமுறிவு 19 மில்லிமீட்டர்இ ரூகம் 36.3 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சிகள் கிடைக்கப்பெற்றதாகவும் இதனால் பல்வேறு பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார.;

நீரேந்து பிரதேசங்களை அண்டிய மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினரும் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் கடந்த 1 ஆந்திகதி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளுக்கமைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.