தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா! – நேற்று மட்டும் 5,528 பேருக்குத் தொற்றியது

தமிழகத்தில் ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5,000 முதல் 6,000 வரை என ஒரே நிலையாகக் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 5,528 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு, 4,86,052 ஆக அதிகரித்துள்ளது

நேற்று 83,411 பேர் உட்பட இதுவரையில், 54,49,635 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து 6,185 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 4,29,416 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 8,154 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் 48,482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று 991 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு, 1,45,606 ஆக அதிகரித்துள்ளது.