நிதி அமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்க சதி? முன்னாள் அமைச்சரின் மகன் பின்னணியில் எனத் தகவல்

நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சரின் மகன் ஒருவர் சமூகவலை தளங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார் என்று கூறப்படுகின்றது.

அலி சப்ரி தற்போது வகிக்கும் பதவியை தனது தந்தைக்கு வழங்கும் நோக்கிலேயே அவர் இவ்வாறு செயல்படுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவலடைந்துள்ளன.

இவ்வாறு, பிரசாரத்தில் ஈடுபடுபவர் 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டவர் என்றும் கூறப்பட்டது.