ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் கைது! சாவகச்சேரியில் சம்பவம்

சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர் நேற்றுக் கைது செய்யப்பட்டார் என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் தனங்கிளப்புப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் என பொலிஸார் கூறினர். சந்தேக நபரைக் கைது செய்து சோதனையிட்டபோது உடைமையில் இருந்து 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தும் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.