கொரோனாவினால் நேற்றும் நால்வர் மரணம் – பலியானோர் தொகை 208 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் நேற்றும் நால்வர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இவ்வாறு உயரிழந்தவர்களில் கொழும்பை சேர்ந்த 91 வயதான பெண் ஒருவரும், அகலவத்தையை சேர்ந்த 65 வயது ஆணும், களுத்துறை – தர்கா நகரை சேர்ந்த 63 வயது ஆணும், அம்பாறை ஆலையடிவேம்பை சேர்ந்த 67 வயது ஆணும் அடங்குவர்.

இதனால், நாட்டில் கொரோனா தொற்றால் மரணமானோரின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது