உக்ரைனிலிருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரை 6 பேருக்கு கொரோனா

உக்ரைனிலிருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உக்ரைனிலி ருந்து வந்த சுற்றுலாப் பயணி களில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயாளிகள் அனை வரும் அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் அமைக்கப்பட் டுள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தமக்குப் பாரிய அச்சுறுத்தலாக இல்லையென்றும் இதை தாம் எதிர் பார்த்திருந்ததாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக் கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் சோதனை முடிவுகள் எதிர் மறையாக இருக்கும் என எதிர் பார்க்க முடியாது. எனவே தாம் எல்லாவற்றிக்கும் தயாராகவே இருந்ததாகவும் இதைப் பற்றி மக்கள் பீதியடையத் தேவையில்லை.

கடந்த திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப் பட்டதன் பின்னர், 180 சுற்று லாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் பயணிகள் விமானம் உக்ரைனிலிருந்து மத் தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதன் பின்னர் இரண்டாவது குழுவாக கடந்த 29ஆம் திகதி உக்ரைனிலிருந்து மேலும் 204 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்தனர்.