நேற்றும் ஐந்து பேர் கொரோனாவுக்குப் பலி – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு ஆண்களும், பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைக் கடந்தவர்கள். இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 191 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.