அன்டிஜன் பரிசோதனையில் 74 தொற்றாளர் அடையாளம்

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்ளை அடையாளம் காண்பதற்காக வெளியேறும் இடங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 13 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த பரிசோதனை மூலம் இதுவரை 74 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி முதல் மேல்மாகாணத்தைவிட்டு வெளியேறுபவர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்த அன்டிஜன் சோதனைகள் ஜனவரி 5 ஆம் திகதி வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.