சஜித் அணியுடன் சங்கமிக்குமா சு.க.? இல்லை என மறுக்கின்றார் தயாசிறி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணையமாட்டார்கள் என்று சு.கவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயா சிறி ஜயசேகர நம்பிக்கை வெளியிட்டார்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாடுகள் மீது அதிருப்தியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளனர் எனவும், அதற்கான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன எனவும், நாளை நடைபெறவுள்ள சு.கவின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வினவிய போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார். கூட்டணிக்குள் பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இவை தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும். எனினும், சஜித் அணியுடன் இணையும் எண்ணம் இல்லை. அதற்கு நாம் என்றும் தயாரில்லை எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.