20 ஆவது திருத்தத்தில் உள்ள சில யோசனைகள் நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கக்கூடியவை; சாலிய பீரிஸ்

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் நீதிமன்றத்தினதும் சட்டத்துறையினதும் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடியது. எனவே இது விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சுட்டிக் காட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கலிங்க இத்திஸ்ஸவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்படவுள்ள குழுவினர் நீதித்துறையின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் விரிவாக அவதானம் செலுத்தவேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.

இதேவேளை, சட்டத்தரணிகள் சங்கத் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இம்முறை போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.